யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பேராசிரியருமான வேல்நம்பி என்பவரது வீட்டின் மீதே இந்த மலர் வளையம் எறியப்பட்டுள்ளது.
மலர் வளையம் எறியப்பட்டமைக்கான காரணம் தெரியாத போதிலும் இந்தப் பயமுறுத்தல் ஏன் விடப்பட்டுள்ளது என்பது தெரியவராததுடன் இந்நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் பற்றிய விபரங்கள் தெரியாததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத் தேர்தல்களின் போது இத்தகைய மலர் வளையத்தை வீட்டின் முன் வைத்தல் மற்றும் எறிந்துவிட்டுப் போதல் போன்ற நடவடிக்கைகள் குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும்,
தற்போது குறிப்பிட்ட விரிவுரையாளரின் வீட்டுக்கு மலர் வளையம் எறியப்பட்டமைக்கான காரணம் எதனையும் இத்தகைய செயலில் ஈடுபட்டோர் அறிவிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.