முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
மக்கள் பொய் பேசினால் குற்றம் அரசு பொய் பேசினால் அது அரசியல்: - சீமான் ஆவேசம்
[Saturday, 09/12/2017 12:16 AM]

கொந்தளித்துக் கிடக்கின்றன தமிழக மீனவக் கிராமங்கள். தொடர் போராட்டம், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என அரசுக்கு எதிராகக் கொதிக்கின்றனர். ' ஒன்பது ஹெலிகாப்டர்களைக் கொண்டு தொலைந்துபோன மீனவர்களைத் தேடுகிறது கேரள அரசாங்கம். இங்கு தெருவுக்குத் தெரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள். இப்படியொரு அரசை எங்குமே பார்த்ததில்லை' எனக் கொந்தளிக்கிறார் சீமான்.

ஒகி புயலின் பாதிப்பால் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரக் கோரி, கன்னியாகுமரி மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். கடலில் மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். புயலின் கோரத்தால் தொலைந்துபோன மீனவர்களின் படகுகள், குஜராத், கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரை ஒதுங்கியிருக்கிறது. இறந்து போன மீனவர்களின் உடல்களும் கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரை ஓரங்களில் ஒதுங்குகிறது. இதனால், மாயமான மீனவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம், மீனவ மக்கள் மத்தியில் நிலவிவருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் நீரோடி, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, புத்தன் துறை உள்பட 8 மீனவ கிராம மக்களும் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும்வரை போராட்டம் தொடரும்’, ‘தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், கேரள முதல்வரிடம் மனு கொடுப்போம்’ என்ற முழக்கங்கள் போராட்டக்களத்தில் எதிரொலித்தன. இதனையடுத்து, அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

மீனவர்களின் போராட்டம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம். " மீனவர் விவகாரத்தை தமிழக அரசு மெத்தனமாக அணுகுகிறது. பேரிடர் மேலாண்மை என்ற ஒன்று இந்த நாட்டில் இல்லை. பேரிடரிலிருந்து மக்களைப் பாதுகாப்பதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். ' 1,384 பேரை மீட்டுவிட்டோம்' என முதல்வர் சொல்கிறார். ' அரசாங்கம் மீட்கவில்லை' என மக்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள். எது உண்மை, புயலால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவ மீனவ கிராமங்கள். அதனால்தான் இந்த அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நான் அங்கு சென்ற நேரத்தில், நமது இரண்டு மீனவர்களை மீட்டுக் கொடுத்தது கேரளா அரசு. மீட்புப் பணிக்காக ஒன்பது ஹெலிகாப்டர்களைக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது கேரள அரசு. இறந்த குடும்பங்களுக்கு 20 லட்ச ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மீனவர்கள் போராட்டம்

நமது முதல்வரோ நான்கு லட்ச ரூபாயை அறிவித்திருக்கிறார். இந்தப் பணமும் இறந்ததை உறுதி செய்த ஏழாண்டுகளுக்குப் பிறகுதான் கொடுக்கப்படுமாம். இது என்ன மாதிரியான நிவாரணம்? அதுவரையில் இறந்துபோன மீனவனின் குடும்பம் என்ன செய்யும்? லட்சத்தீவு, மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் கடல் பகுதியில் நமது மீனவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர்களை மீட்டுக் கொண்டு வருவதில் தமிழக முதல்வருக்கு என்ன பிரச்னை? எவ்வளவு நவீனம் வந்துவிட்டது? நம்மைக் கொல்வதற்குத்தான் அரசின் ரேடார் கருவிகள் பயன்படுகிறது. நம்மைப் பாதுகாப்பதற்கு ரேடாரைப் பயன்படுத்த மாட்டார்கள். மூன்று நாள்களுக்கும் மேலாக தத்தளித்து, நீந்தி வந்த மீனவர் சொல்கிறார். 'படகின் ஒரு பகுதியைப் பிடித்துக்கொண்டே தத்தளித்துக் கொண்டிருந்தோம்' என்கிறார். இரண்டாயிரம் உயிர் என்பது சும்மாவாக இருக்கிறது? தனியாகத் துண்டித்துவிடப்பட்ட தீவு போல தமிழக மீனவ கிராமங்கள் மாறிவிட்டன. அந்த வெறுப்பில்தான், 'எங்களை கேரளாவுடன் இணைத்துவிடுங்கள்' என மீனவ மக்கள் சொல்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமிஅவர்களுக்கு ஆதரவு கொடுத்துப் பேசும்போது, ' இன்று இந்த அரசு இப்படியிருக்கிறது. நாளை நாம் சிறப்பான அரசை அமைக்கும்போது இப்படிச் சொல்லும் நிலை ஏற்படாது' எனக் கூறினேன். மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது முதல் நிவாரணம் அளிப்பது வரையில் கேரள அரசு முழுவீச்சில் செயல்படுகிறது. இந்த அரசுதான் நமது மீனவ மக்களைக் கண்டுகொள்ளவில்லை. ஒரு வீட்டில் உள்ள இரண்டு ஆண்களும் பலியாகிவிட்டார்கள். அந்தக் குடும்பத்தின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இது எவ்வளவு பெரிய இழப்பு? பேராபத்து சூழும் வேளையில் அரசு நம் பக்கம் வரவில்லையென்றால், மக்களின் மனநிலை எப்படி இருக்கும்? ' தமிழக அரசு தங்களைக் கைவிட்டுவிட்டது' என்பதை உணரும்போது, 'கேரளாவுடன் இணைந்து கொள்கிறோம்' என்கிறார்கள். இது கோபத்தின் வெளிப்பாடு.

பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துவிட்டன. இதைச் சரிசெய்யாமல், மின்னணு பரிவர்த்தனை, பணமில்லாத பரிவர்த்தனை எனக் கிளம்புகிறார்கள். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு வாரமாக மின்சாரம் இல்லை. எங்கள் கட்சிப் பிள்ளைகள்தான் அவசரத் தொடர்புக்காக ஜெனரேட்டர் துணையோடு சில உதவிகளைச் செய்து கொடுத்தார்கள். இங்கு பெரும் பிரச்னையே, விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டதா? ஏன் நிராகரித்தார்கள் என்பதுதான். பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு யாருமே செல்வதில்லை. அதை ஒரு பொருட்டாகவே அரசு பார்க்கவில்லை. தமிழக அரசு மீட்டதாகச் சொல்லப்படும் 1,384 பேரில் ஒருவரைப் பேட்டி கொடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். எப்படியெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்பது தெரியவரும். மக்கள் பொய் பேசினால் குற்றம். அரசு பொய் பேசினால் அது அரசியல் என்றாகிவிட்டது.

மக்களுக்காக நிறுவப்படும் அரசு, மக்களுக்காகச் செயல்படுவதில்லை. தேர்தல் வெற்றிக்குப் பிறகு மக்களுக்கும் அரசுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி வந்துவிடுகிறது. பாதிக்கப்பட்ட மீனவ மக்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று பார்ப்பதில் என்ன பிரச்னை? ' வாழை மரம் விழுந்தது; ரப்பர் மரம் போனது' என்ற செய்திகளைத்தான் சொல்கிறார்கள். மீனவர்கள் எவ்வளவு பேர் பலியானார்கள் என்பதற்கு முறையான கணக்கு இருக்கிறதா? அதுவே, கேரள முதல்வர் பினராயி விஜயனைப் பாருங்கள். மிகுந்த பொறுப்புடன் செயல்படுகிறார். ஏற்கெனவே, இத்தாலியக் கடற்படை வீரர்கள், கேரள மீனவரைச் சுட்டதற்கு உடனே கைது செய்தது அப்போதைய உம்மன் சாண்டி அரசு. நாடாளுமன்றம் வரையில் இந்த விவகாரம் சென்றது. தற்போது புயலில் பாதித்த மக்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்கிறார் பினராயி விஜயன். மீனவர்களை மீட்டுக்கொண்டு வரும் வேலையில் தீவிரம் காட்டுகிறார். ' புயலுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்' என்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். எவ்வளவு பொய்யான தகவல் இது? தெருவுக்குத் தெரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள். ஒரு நூற்றாண்டு விழாவை ஒருமுறை கொண்டாடுங்கள். இங்கு எவ்வளவு பிரச்னை இருக்கிறது? அதைவிட்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு என்ற பெயரில் மக்கள் பணத்தை வாரியிறைப்பது எந்த வகையில் சரியானது? இது எம்.ஜி.ஆரைப் போற்றுவதுபோலத் தெரியவில்லை. இந்த அரசு மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருக்கிறார்கள். இரண்டாயிரம் உயிர்களைக் காணவில்லை. 'பிணத்தையாவது கொண்டு வந்து கொடுங்கள்' என மக்கள் கதறுகின்றனர். மக்களை ஓட்டாகத்தான் அரசு கருதுகிறது. ஓர் உயிராகக் கருதவில்லை. இப்படியோர் தேசத்தை நான் எங்கேயும் பார்த்ததில்லை" என்றார் கொதிப்புடன்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு
[Sunday, 31/12/2017 12:21 AM]
முதல்வராக வர தினகரன் சதித்திட்டம் தீட்டினார்: - ஓ.பன்னீர்செல்வம்
[Sunday, 31/12/2017 12:17 AM]
கொள்ளைக்காரர்களிடம் நாட்டை கொடுத்து விட்டோம்: - சீமான்
[Sunday, 31/12/2017 12:17 AM]
5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம்!
[Saturday, 30/12/2017 07:13 AM]
ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது: - முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
[Saturday, 30/12/2017 07:03 AM]
விபச்சாரத்தில் சிறுமிகளை ஈடுபடுத்தினால் ஆயுள் தண்டனை: - புதிய சட்டம் விரைவில் அமல்
[Saturday, 30/12/2017 07:03 AM]
தமிழகத்தில் திருமாவளவன் மதக் கலவரத்தை தூண்டுகிறார்: - ஹெச்.ராஜா
[Sunday, 17/12/2017 02:02 AM]
கள்ளர் வெட்டுத் திருவிழா: - ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
[Sunday, 17/12/2017 02:01 AM]
முத்தப் போட்டியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்!
[Wednesday, 13/12/2017 05:34 AM]
ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் கட்டுக்கதை அல்ல: - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
[Wednesday, 13/12/2017 05:33 AM]
ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் பிரவீன் நாயர் நியமனம்
[Sunday, 10/12/2017 12:57 AM]
வெங்கய்யா நாயுடு சென்னை வருகை
[Sunday, 10/12/2017 12:56 AM]
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட 45 தமிழக மீனவர்கள் கொச்சி வருகை
[Sunday, 10/12/2017 12:55 AM]
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!
[Sunday, 10/12/2017 12:48 AM]
சேகர்ரெட்டியிடம் சிக்கிய டைரி குறிப்பு வெளியானது ஓபிஎஸ்சுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்
[Saturday, 09/12/2017 12:29 AM]
13 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்ற ஏழு பேர் கைது!
[Saturday, 09/12/2017 12:18 AM]
திமுக வெற்றியை தடுக்க ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்த சதி
[Friday, 08/12/2017 05:31 AM]
மணிசங்கர் அய்யர் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம்
[Friday, 08/12/2017 05:31 AM]
ஒக்கி புயல் பாதிப்பால் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் எடப்பாடி அறிவிப்பு
[Friday, 08/12/2017 05:30 AM]
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
[Thursday, 07/12/2017 07:25 AM]
இடைத்தேர்தலில் வரலாற்றை மாற்றி அமைப்போம்! ஸ்டாலின்
[Thursday, 07/12/2017 07:25 AM]
தேர்தல் அலுவலர் சுதந்திரமாக செயல்படவில்லை: - திருமாவளவன் கருத்து
[Wednesday, 06/12/2017 07:33 AM]
சுயேச்சையாக நிற்கும் இளைஞரில் ஒருவருக்காக பிரசாரம் செய்து ஜெயிக்க வைப்பேன்: - விஷால்
[Wednesday, 06/12/2017 07:32 AM]
செயற்கை மணல் ஜனவரி முதல் விற்பனை வருகிறது
[Saturday, 02/12/2017 02:14 AM]
'ஒக்கி' புயலில் சிக்கியுள்ள மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை
[Saturday, 02/12/2017 02:13 AM]
ஆர்.கே.நகர் தேர்தல் 21 பேர் மனு தாக்கல்
[Saturday, 02/12/2017 02:12 AM]
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு
[Saturday, 02/12/2017 02:12 AM]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு…!!
[Thursday, 30/11/2017 07:21 AM]
ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு ஜனவரியில் வரும் : - சத்திய நாராயணராவ்
[Wednesday, 29/11/2017 06:53 AM]
ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றிவிட்டனர்: - சீமான்
[Wednesday, 29/11/2017 06:52 AM]
இரு குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்: - ஒரு குழந்தை பலி
[Wednesday, 29/11/2017 06:52 AM]
மது குடிக்க பணம் தராத தாயாரை அடித்துக் கொன்ற மகன்!
[Tuesday, 28/11/2017 07:14 AM]
உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவியை தாக்கிய கணவர்: - ஒரு வயது குழந்தையுடன் தற்கொலை முயற்சி
[Tuesday, 28/11/2017 07:14 AM]
ராமேஸ்வரத்தில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்ச்சி!
[Tuesday, 28/11/2017 07:12 AM]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்
[Monday, 27/11/2017 06:50 AM]
பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும்!
[Sunday, 26/11/2017 06:51 AM]
நாகை மீனவர்கள் 12 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்
[Sunday, 26/11/2017 12:57 AM]
திமுக வேட்பாளர் மருதுகணேஷ்: ஸ்டாலின் அறிவிப்பு
[Sunday, 26/11/2017 12:56 AM]
ஹபீஸ் சயீதை விடுவித்தது பாக். நீதிமன்றம்
[Thursday, 23/11/2017 07:37 AM]
15-ஆவது நிதிக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
[Thursday, 23/11/2017 07:36 AM]
3,000 சாதுக்கள் பங்கேற்கும் 3 நாள் ஹிந்து மாநாடு நாளை தொடக்கம்
[Thursday, 23/11/2017 07:36 AM]
இரட்டை இலை சின்னம்? இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு
[Thursday, 23/11/2017 07:35 AM]
டிச. 4-இல் அதிகாரபூர்வ விசாரணையை உறுதி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்
[Tuesday, 21/11/2017 07:14 AM]
பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு மோடிக்கு துணிச்சல் இல்லை! சோனியா
[Tuesday, 21/11/2017 07:12 AM]
ஒன்று முதல் பிளஸ் 2 வரை புதிய வரைவு பாடத் திட்டம்: வெளியிட்டார் முதல்வர்
[Tuesday, 21/11/2017 07:12 AM]
பெங்களூரில் பாஜகவின் வெற்றிவாய்ப்பைத் தடுக்க சித்தராமையா வியூகம்
[Tuesday, 21/11/2017 07:11 AM]
போயஸ் இல்லத்தில் அதிரடி சோதனை
[Saturday, 18/11/2017 06:51 AM]
இந்தியாவின் கல்வி அமைப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது: பில்கேட்ஸ் கருத்து
[Saturday, 18/11/2017 06:50 AM]
விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
[Saturday, 18/11/2017 06:49 AM]
ஆய்வு செய்வதற்கான அதிகாரம் தமிழக ஆளுநருக்கு இருக்கிறது! கிரண்பேடி
[Saturday, 18/11/2017 06:48 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 313 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube