முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
போயஸ் இல்லத்தில் அதிரடி சோதனை
[Saturday, 18/11/2017 06:51 AM]

போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினர். இந்தச் சோதனை நள்ளிரவையும் தாண்டி நீடித்தது. போலி நிறுவனங்களை நடத்தியது, அந்த நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில்j ஈடுபட்டது, வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 9-ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர்.

தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்தச் சோதனை கடந்த திங்கள்கிழமை (நவ.13) முடிவுக்கு வந்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வுப் பணி நிறைவுபெற ஒரு மாதத்தைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. மேலும் வருமான வரித் துறையினர் முதல் கட்டமாக நடத்திய ஆய்வில், ரூ.1,430 கோடிக்கான ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதே வேளையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சோதனை நடைபெற்றவர்களிடம் வருமான வரித் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். வருமான வரித்துறை விசாரணைக்கு ஜெயா தொலைக்காட்சி தலைமை நிர்வாகி விவேக், டாக்டர் சிவக்குமார், டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்ரியா, ஷகிலா ஆகியோர் தொடர்ச்சியாக தினமும் ஆஜராகி வருகின்றனர். அதேநேரத்தில் தேவைப்படும் நிலையில் மீண்டும் சோதனையில் வருமான வரித் துறை ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டு வந்தது.

வேதா இல்லத்தில்... இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் சென்றனர்.

போலீஸார் குவிப்பு: இந்தச் சோதனை நடத்துவதற்கு சென்னை பெருநகர காவல்துறையிலும் பாதுகாப்புக் கேட்டிருந்தனர். இதனால் தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையில் போலீஸார் அங்கு பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள், வேதா இல்லத்தில் உள்ள ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை, சசிகலா பயன்படுத்திய அறைகளிலும் சோதனை செய்தனர். இந்த அறை வேதா இல்லத்தின் இணைப்புக் கட்டடத்தில் உள்ளது ஆகும். இந்த கட்டடத்திலேயே ஜெயலலிதா, தன்னைச் சந்திக்க வரும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது வழக்கமாகும். ஏற்கெனவே, பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையிலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெறுவதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.

வேதா இல்லம் அருகே உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் பழைய அலுவலகத்தில் வருமான வரிச்சோதனை ஏற்கெனவே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தத் திடீர் சோதனையின் காரணமாக போயஸ் கார்டன் முழுவதும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

தினகரன் ஆதரவாளர்கள் கைது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் சோதனையை தொடங்கினர் . இந்தத் தகவல் வேகமாகப் பரவியதால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் இரவு 10 மணி முதல் போயஸ் தோட்டத்தை நோக்கி வரத் தொடங்கினர்.

நேரம் செல்ல செல்ல அந்தப் பகுதியில் கூட்டம் அதிகரித்தது. இதனால் போயஸ் தோட்டச் சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து தடைபட்டது.

போயஸ் தோட்ட இல்லத்தின் முன் கூடிய தொண்டர்கள் மத்திய அரசையும் பாஜகவையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய முற்பட்டபோது தினகரன் ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இரவு 1 மணியைத் தாண்டியும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. முன்னதாக இரவு 10.30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் விவேக் ஜெயராமன் போயஸ் தோட்டத்துக்கு வந்தார். அவரையும் அவரது மனைவியையும் அதிகாரிகள் வேதா இல்லத்துக்குள் செல்ல அனுமதித்தனர். அவர்கள் முன்னிலையில் தான் சோதனை நடைபெற்றது.

தினகரன் பேட்டி...: போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரி சோதனை நடத்துவது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் துரோகம் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தூண்டுதலின் பேரில்தான் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது, இதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் இவ்வாறு செய்கின்றனர் என்றும் தினகரன் கூறினார்.

ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் சோதனை நடத்துவது வருத்தம் அளிக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் கூறினார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு...: இதற்கு முன் 1996 டிசம்பரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை நடத்தினர். 21 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு
[Sunday, 31/12/2017 12:21 AM]
முதல்வராக வர தினகரன் சதித்திட்டம் தீட்டினார்: - ஓ.பன்னீர்செல்வம்
[Sunday, 31/12/2017 12:17 AM]
கொள்ளைக்காரர்களிடம் நாட்டை கொடுத்து விட்டோம்: - சீமான்
[Sunday, 31/12/2017 12:17 AM]
5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம்!
[Saturday, 30/12/2017 07:13 AM]
ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது: - முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
[Saturday, 30/12/2017 07:03 AM]
விபச்சாரத்தில் சிறுமிகளை ஈடுபடுத்தினால் ஆயுள் தண்டனை: - புதிய சட்டம் விரைவில் அமல்
[Saturday, 30/12/2017 07:03 AM]
தமிழகத்தில் திருமாவளவன் மதக் கலவரத்தை தூண்டுகிறார்: - ஹெச்.ராஜா
[Sunday, 17/12/2017 02:02 AM]
கள்ளர் வெட்டுத் திருவிழா: - ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
[Sunday, 17/12/2017 02:01 AM]
முத்தப் போட்டியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்!
[Wednesday, 13/12/2017 05:34 AM]
ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் கட்டுக்கதை அல்ல: - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
[Wednesday, 13/12/2017 05:33 AM]
ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் பிரவீன் நாயர் நியமனம்
[Sunday, 10/12/2017 12:57 AM]
வெங்கய்யா நாயுடு சென்னை வருகை
[Sunday, 10/12/2017 12:56 AM]
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட 45 தமிழக மீனவர்கள் கொச்சி வருகை
[Sunday, 10/12/2017 12:55 AM]
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!
[Sunday, 10/12/2017 12:48 AM]
சேகர்ரெட்டியிடம் சிக்கிய டைரி குறிப்பு வெளியானது ஓபிஎஸ்சுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்
[Saturday, 09/12/2017 12:29 AM]
13 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்ற ஏழு பேர் கைது!
[Saturday, 09/12/2017 12:18 AM]
மக்கள் பொய் பேசினால் குற்றம் அரசு பொய் பேசினால் அது அரசியல்: - சீமான் ஆவேசம்
[Saturday, 09/12/2017 12:16 AM]
திமுக வெற்றியை தடுக்க ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்த சதி
[Friday, 08/12/2017 05:31 AM]
மணிசங்கர் அய்யர் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம்
[Friday, 08/12/2017 05:31 AM]
ஒக்கி புயல் பாதிப்பால் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் எடப்பாடி அறிவிப்பு
[Friday, 08/12/2017 05:30 AM]
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
[Thursday, 07/12/2017 07:25 AM]
இடைத்தேர்தலில் வரலாற்றை மாற்றி அமைப்போம்! ஸ்டாலின்
[Thursday, 07/12/2017 07:25 AM]
தேர்தல் அலுவலர் சுதந்திரமாக செயல்படவில்லை: - திருமாவளவன் கருத்து
[Wednesday, 06/12/2017 07:33 AM]
சுயேச்சையாக நிற்கும் இளைஞரில் ஒருவருக்காக பிரசாரம் செய்து ஜெயிக்க வைப்பேன்: - விஷால்
[Wednesday, 06/12/2017 07:32 AM]
செயற்கை மணல் ஜனவரி முதல் விற்பனை வருகிறது
[Saturday, 02/12/2017 02:14 AM]
'ஒக்கி' புயலில் சிக்கியுள்ள மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை
[Saturday, 02/12/2017 02:13 AM]
ஆர்.கே.நகர் தேர்தல் 21 பேர் மனு தாக்கல்
[Saturday, 02/12/2017 02:12 AM]
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு
[Saturday, 02/12/2017 02:12 AM]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு…!!
[Thursday, 30/11/2017 07:21 AM]
ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு ஜனவரியில் வரும் : - சத்திய நாராயணராவ்
[Wednesday, 29/11/2017 06:53 AM]
ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றிவிட்டனர்: - சீமான்
[Wednesday, 29/11/2017 06:52 AM]
இரு குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்: - ஒரு குழந்தை பலி
[Wednesday, 29/11/2017 06:52 AM]
மது குடிக்க பணம் தராத தாயாரை அடித்துக் கொன்ற மகன்!
[Tuesday, 28/11/2017 07:14 AM]
உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவியை தாக்கிய கணவர்: - ஒரு வயது குழந்தையுடன் தற்கொலை முயற்சி
[Tuesday, 28/11/2017 07:14 AM]
ராமேஸ்வரத்தில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்ச்சி!
[Tuesday, 28/11/2017 07:12 AM]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்
[Monday, 27/11/2017 06:50 AM]
பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும்!
[Sunday, 26/11/2017 06:51 AM]
நாகை மீனவர்கள் 12 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்
[Sunday, 26/11/2017 12:57 AM]
திமுக வேட்பாளர் மருதுகணேஷ்: ஸ்டாலின் அறிவிப்பு
[Sunday, 26/11/2017 12:56 AM]
ஹபீஸ் சயீதை விடுவித்தது பாக். நீதிமன்றம்
[Thursday, 23/11/2017 07:37 AM]
15-ஆவது நிதிக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
[Thursday, 23/11/2017 07:36 AM]
3,000 சாதுக்கள் பங்கேற்கும் 3 நாள் ஹிந்து மாநாடு நாளை தொடக்கம்
[Thursday, 23/11/2017 07:36 AM]
இரட்டை இலை சின்னம்? இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு
[Thursday, 23/11/2017 07:35 AM]
டிச. 4-இல் அதிகாரபூர்வ விசாரணையை உறுதி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்
[Tuesday, 21/11/2017 07:14 AM]
பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு மோடிக்கு துணிச்சல் இல்லை! சோனியா
[Tuesday, 21/11/2017 07:12 AM]
ஒன்று முதல் பிளஸ் 2 வரை புதிய வரைவு பாடத் திட்டம்: வெளியிட்டார் முதல்வர்
[Tuesday, 21/11/2017 07:12 AM]
பெங்களூரில் பாஜகவின் வெற்றிவாய்ப்பைத் தடுக்க சித்தராமையா வியூகம்
[Tuesday, 21/11/2017 07:11 AM]
இந்தியாவின் கல்வி அமைப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது: பில்கேட்ஸ் கருத்து
[Saturday, 18/11/2017 06:50 AM]
விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
[Saturday, 18/11/2017 06:49 AM]
ஆய்வு செய்வதற்கான அதிகாரம் தமிழக ஆளுநருக்கு இருக்கிறது! கிரண்பேடி
[Saturday, 18/11/2017 06:48 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 313 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube