முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
காணாமல் போன பிரிகேடியர்! இரகசியங்கள் கசியுமா?
[Sunday, 16/07/2017 03:49 AM]

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்காவின் வாசிங்டன் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்கவைக் காணவில்லை என்ற செய்தி கடந்த வாரம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்க அமெரிக்காவில் காணாமல் போனது இப்போது நடந்த ஒரு சம்பவமல்ல. அது நடந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்களாகி விட்டன.

புதிய இராணுவத் தளபதியாக கடந்த 4ம் திகதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்ட பின்னர் தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க பதவியேற்ற பின்னர் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களின் நிலைமை தொடர்பான அறிக்கைளைப் பெற்றுவந்த சூழலில் தான் பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்கவின் விவகாரமும் அம்பலமாகியிருக்கிறது.

பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்க அமெரிக்காவில் காணாமல் போய் ஏழு மாதங்கள் வரையில் இந்த விடயத்தை இராணுவத் தலைமையகம் வெளியிடவில்லை. வெளிவிவகார அமைச்சும் இதனைப்பற்றி எதுவும் கூறவில்லை.

பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்கவை வாசிங்டனில் உள்ள தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமித்து அவருக்கான வசதிகளை வழங்குவதில் இராணுவத் தலைமையகத்துக்கு மாத்திரமன்றி வெளிவிவகார அமைச்சுக்கும் பங்கிருந்தது.

எவ்வாறாயினும் வெளிவிவகார அமைச்சிலும் இராணுவத் தலைமையிலும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ள சூழலிலேயே பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்க காணாமல் போயிருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியிலிருந்த கடைசி முழு மாதமான 2014 டிசம்பரில் தான் பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்க வாசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரிலேயே இவருக்கான நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பதவி இரண்டு ஆண்டுகளுக்கானது. தேவைப்பட்டால் அரசாங்கம் இடையிலேயே திருப்பி அழைத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும் கூட அரசாங்கம் பிரிகேடியர் ஜெயந்த ரட்னாயக்கவை திருப்பி அழைக்கவில்லை. அதேவேளை பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்க ஒருமுறை கூட கொழும்புக்கு வந்து செல்லவுமில்லை.

2016 டிசம்பருடன் இவரது பதவிக் காலம் முடிந்தது. பணியிலிருந்த கடைசி நாளில் தான் நாடு திரும்பப் போவதாக தூதரக அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதற்குப் பின்னர் தூதரக அதிகாரிகள் கண்ணிலும் அவர் படவேயில்லை.

அவர் அமெரிக்காவில் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் கூட செயலிழந்த நிலையில் இருக்கிறது. இலங்கை இராணுவத்தின் ஒரு முக்கியமான அதிகாரி, அதுவும் அமெரிக்காவில் பாதுகாப்பு ஆலோசகராக இராஜதந்திரப் பணியிலிருந்த ஒரு அதிகாரி, திடீரெனக் காணாமல் போயிருந்த நிலையிலும் அரசாங்கம் மெத்தனமாகவே இருந்திருக்கிறது.

அவரைக் கண்டுபிடிப்பதற்கு இதுவரையில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருந்தது என்று தெரியவில்லை. இப்போதுதான் இராணுவத் தலைமையகம் அவரை படையை விட்டுத் தப்பி ஓடியவராக அறிவிக்க முடிவு செய்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி இராஜதந்திர கடவுச்சீட்டுடன் காணாமல் போயுள்ள அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு இன்ரபோலிடம் வெளிவிவகார அமைச்சு உதவியும் கோரியிருக்கிறது.

advertisement


பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்க அமெரிக்காவில் தலைமறைவாகியதன் விளைவாக இலங்கை இராணுவம் முக்கியமான ஒன்றை இழக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

அது என்ன என்பதைப் பார்க்க முன்னர் தலைமறைவாக இருக்கும் பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்க யார் என்று பார்க்க வேண்டும்.

ஏனென்றால் அவர் யார் என்ற அறிமுகம் கிடைக்கும் போது ஏன் அவர் தலைமறைவாக இருக்கிறார் என்ற கேள்விக்கான ஒரு துலக்கமான விடையை ஊகிக்க முடியும்.

இராணுவத்தில் கஜபா படைப்பிரிவில் சேரத்துக் கொள்ளப்பட்டு பின்னர் விசேட படைப்பிரிவுக்கு மாறியவர் தான் பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்க. இலங்கை இராணுவத்தில் விசேட படைப்பிரிவு முக்கியமான ஒன்று. அதில் பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்கவுக்கும் தனியான இடமுள்ளது.

1996ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு படைத்தளம் தாக்கி அழிக்கப்பட்ட போது அதனை மீளக் கைப்பற்றுவதற்காக அலம்பலில் 180 பேர் கொண்ட விசேட படைப்பிரிவு கெலிஹொப்டர்கள் மூலம் தரையிறக்கப்பட்டது.

அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் மேஜர் பஸ்லி லாபிர். இவர் சண்டையில் கொல்லப்பட்ட பின்னர் தரையிறக்கப்பட்ட விசேட படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய மேஜராக இருந்தவர் ஜயந்த ரட்னாயக்கதான்.

ஒருபக்கம் புலிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க இவர்களுக்கு உதவிக்காக வந்த இரண்டு சியாமாசெற்றி விமானங்கள் புலிகளின் நிலையென்று வீசிய குண்டுகள் விசேட படைப்பிரிவினர் மீதே விழுந்து வெடித்தன. இதில் மேஜர் ஜயந்த ரட்னாயக்க மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் 17 விசேட படைப்பிரிவினர் அந்தத் தாக்குதலில் பலியாகினர்.

முல்லைத்தீவை மீட்கும் முயற்சிகள் பயனற்றுப் போக மேலதிகமாக தரையிறக்கப்பட்ட விசேட படையினருடன் கடல்வழியாக பாதுகாப்பாகத் தப்பிச் சென்றார் மேஜர் ஜயந்த ரட்னாயக்க .

விசேட படைப்பிரிவில் இருந்த போது முக்கியமான பல தாக்குதல்களில் பங்கேற்ஹறு குறிப்பிடத்தக்க அதிகாரிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர் இவர்.

இதனால் இவர் கேர்ணலாக இருந்த போது பாதுகாப்புச் செயலராக பதவி வகித்த கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.

இதன்போது பல்வேறு வெள்ளைவான் கடத்தல்களை வழி நடத்தினார் என்ற குற்றச்சாட்டுகள் சிங்கள ஊடகங்களில் அப்போது முன்வைக்கப்பட்டிருந்தன.

கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமான அவருக்கு மிகவும் நம்பிக்கையான அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்.

இலங்கை இராணுவம் ஆண்டுதோறும் கடற்படை, விமானப்படையுடன் இணைந்து நடாத்தும் பாரிய போர்ப் பயிற்சியான நீர்க்காகம் - 03 நடவடிக்கை 2013ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போது அதன் நடவடிக்கை கட்டளைத் தளபதியாகப் பணியாற்றியவர்.

2014ம் ஆண்டு வவுனியாவில் விசேட படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய போதும் இவர் ஒரு விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பினார். பிபிலைக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது இவரது வாகனம் விபத்துக்குள்ளானது.

வாகனத்தின் சாரதியான விசேட பிடைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் மரணமானார். அப்போது கேர்ணலாக இருந்த ஜயந்த ரட்னாயக்கவும் அவரது மனைவியும் காயமடைந்தனர்.


இதற்குப் பின்னரே 2014 டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கு அவர் பயணமாகியிருந்தார். கோத்தபாய ராஜபக்ச தனது தாய்ப் படைப்பிரிவான கஜபா படைப்பிரிவில் இருந்த அதிகாரிகளுடன் கூடுதல் உறவுகளையும் நம்பிக்கையையும் வைத்திருந்தார்.

பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்க பின்னர் விசேட படைப்பிரிவுக்கு மாறியிருந்தாலும் அடிப்படையிலும் அவர் கஜபா படைப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவருடன் கூடுதல் நெருக்கமாக இருந்தார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்பதால் போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் பலவற்றை அவர் அறிந்திருந்தார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

கோத்தபாய ராஜபக்ச பற்றிய இரகசியங்களை அறிந்த ஒரு படையதிகாரி அமெரிக்காவில் காணாமல் போனதை சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியுமா? ஏனென்றால் படைகளிலிருந்து விலகிய சில அதிகாரிகள் போர்க்கால இரகசியங்களை அமெரிக்காவிடம் கூறியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளும் சர்சசைகளும் எழுந்திருக்கின்றன.

இப்படியான நிலையில் கோத்தபாயவுக்கு நெருக்கமாக இருந்த ஒரு உயர் இராணுவ அதிகாரி காணாமல் போயிருப்பதை அவ்வளவு இலகுவான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது.

பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்கவின் சகோதரி ஒருவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் அவரது துணையுடனேயே இவர் மறைந்திருப்பதாகவும் கூடச் சொல்லப்படுகிறது.

எவ்வாயினும் இந்த விவகாரம் இராணுவத்துக்குப் புதியதொரு அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது.

வாசிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவி இதற்கு முன்னர் நீண்ட காலமாக இராணுவத்திடமே இருந்து வந்தது. இராணுவ அதிகாரிகளே இந்தப் பதவிக்கு தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால் இப்போது அதாவது 2016 டிசம்பருக்குப் பின்னர் பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்க தப்பிச் சென்ற பின்னர் வாசிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் பதவி கடற்படைக்கு கைமாறியிருக்கிறது.

அமெரிக்காவுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே றியல் அட்மிரல் தர்மேந்திர வெட்டேவ இந்தப் பதவிக்கு நியமிக்கபட்டிருந்தமைக்கு ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்கவின் செயற்பாடாகும்.

இவரது செயற்பாடே வாசிங்டனில் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை இராணுவம் இழப்பதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றொசான் செனவிரத்ன.

புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இராணுவத்தை மறுசீரமைப்பது ஒழுக்கத்தை தீவிரமாகக் கடைப்பிடிப்பது என்பதில் கூடுதல் அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில் பிரிகேடியர் ஜயந்த ரட்னாயக்க விவகாரம் அவருக்கு சவாலாகத் தான் இருக்கப் போகிறது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சிறிலங்காவில் இராணுவ மறுசீரமைப்பு சாத்தியமா?
[Thursday, 21/12/2017 07:23 AM]
சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா
[Sunday, 10/12/2017 12:40 AM]
பிரபாகரன்: ஆட்டிப் படைக்கும் ஆளுமை
[Sunday, 26/11/2017 08:08 AM]
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மீதான தாக்குதல்
[Monday, 13/11/2017 06:14 AM]
எப்படித் தலைமை தாங்க வேண்டும் என்று தலைவர்களுக்கு புத்தர் போதிக்கவில்லை
[Thursday, 09/11/2017 07:06 AM]
நாடாளுமன்ற சமநிலையை மாற்றியமைக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?
[Tuesday, 07/11/2017 06:52 AM]
தேர்தல் அறிவிப்பு: புதிய அரசியலமைப்பு விவாதத்தை விழுங்கிவிட்டது!
[Sunday, 05/11/2017 03:25 AM]
கிராமங்களில் வறுமையை வளர்த்த சிங்கள பௌத்த மேலாதிக்கம்
[Friday, 03/11/2017 05:42 AM]
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலியை வெளிப்படுத்தி நிற்கும் ஒரு மரணம்
[Friday, 27/10/2017 05:46 AM]
சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா
[Monday, 16/10/2017 07:04 AM]
அமெரிக்கா பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்!
[Sunday, 03/09/2017 01:32 AM]
சீனாவின் கடன்பொறி – சிறிலங்கா முன் உள்ள சமநிலை சவால்
[Monday, 21/08/2017 12:45 AM]
சீனாவிடம் அம்பாந்தோட்டை – இந்தியா கவலைப்படுவது ஏன்?
[Friday, 04/08/2017 07:07 AM]
மலபார் கூட்டுப் பயிற்சி – யாரைக் குறிவைக்கிறது?
[Wednesday, 02/08/2017 07:19 AM]
சிறிலங்கா அரசுக்கு கடுப்பை ஏற்படுத்திய ஐ.நா சிறப்பு நிபுணரின் பூர்வாங்க அறிக்கை
[Monday, 24/07/2017 07:06 AM]
வரலாற்றுப் பழி சுமக்குமா கூட்டமைப்பு?
[Monday, 17/07/2017 04:12 AM]
போர்க்குற்ற விசாரணைக்கான கதவுகள் திறக்கப்படுமா?
[Sunday, 09/07/2017 07:37 AM]
மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் மறைமுக சதி!
[Friday, 07/07/2017 05:23 AM]
தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி!
[Friday, 07/07/2017 05:22 AM]
தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்
[Sunday, 25/06/2017 04:38 AM]
வடமாகாண சபைக்கு ஓர் திறந்த மடல்! ச.வி.கிருபாகரன்
[Tuesday, 20/06/2017 01:54 PM]
விக்னேஸ்வரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்
[Monday, 19/06/2017 07:00 AM]
ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி? அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? – நிலாந்தன்
[Sunday, 18/06/2017 07:51 PM]
வடமாகாண சபையின் எதிர்காலம்?
[Sunday, 18/06/2017 06:34 AM]
சிறிலங்காவினால் புறக்கணிக்கப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள்
[Wednesday, 14/06/2017 07:35 AM]
போர் முடிந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரும் சிறிலங்கா திரும்புவதற்குத் தடுமாறும் அகதிகள்
[Sunday, 11/06/2017 06:27 AM]
சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர்
[Thursday, 08/06/2017 05:09 PM]
வடக்கு, கிழக்கில் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிவில் சமூகம்
[Monday, 05/06/2017 01:39 AM]
ஹெய்டியில் சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – பகுதி -2
[Monday, 05/06/2017 01:34 AM]
சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – அனைத்துலக ஊடகம்
[Saturday, 03/06/2017 07:43 AM]
சிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்
[Monday, 29/05/2017 10:41 PM]
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2
[Sunday, 28/05/2017 01:35 AM]
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்
[Friday, 26/05/2017 10:26 PM]
தெற்கு, மத்திய ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கான கதவுகளை திறந்து விடும் அமெரிக்கா
[Tuesday, 16/05/2017 05:40 AM]
காலை வாரும் ஐநா தீர்மான வரைவு!
[Sunday, 19/03/2017 04:39 AM]
சிறிலங்காவில் இனப்பிளவைத் தூண்டும் மொழி ரீதியான அவமதிப்புகள்
[Tuesday, 07/03/2017 07:20 AM]
சொந்த நிலத்துக்காகப் போராடும் தமிழ் மக்கள்
[Friday, 03/03/2017 05:43 AM]
ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்
[Monday, 27/02/2017 07:12 AM]
சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் வெற்றிக்கு பணப்பை மட்டும் போதுமா?
[Friday, 24/02/2017 05:11 AM]
காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம்
[Tuesday, 21/02/2017 06:48 AM]
இந்திய – சிறிலங்கா உடன்பாடு : சிஐஏ அறிக்கையை நிராகரிக்கும் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வாளர்
[Monday, 20/02/2017 06:12 AM]
புலிகள் சுமந்திரனைக் கொல்ல திட்டமா? இந்திய இலங்கை அரசுகளின் நாடக மேடை ஆரம்பம்
[Monday, 30/01/2017 11:25 PM]
வாய்ப்பைத் தவறவிடப் போகிறார்களா சிங்களத் தலைவர்கள்?
[Thursday, 12/01/2017 06:59 AM]
பௌத்த மதவெறியினால் மியான்மாருக்குள் ஊடுருவும் ஐ.எஸ் தீவிரவாதம்
[Monday, 09/01/2017 06:48 AM]
தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைக்கக்கூடாது!
[Sunday, 08/01/2017 06:07 AM]
ஆட்சிக்கும் பிரதமருக்கும் அடித்துள்ள அபாய மணி..! - மோசமான விளைவுகளை சந்திக்குமா இலங்கை??
[Sunday, 08/01/2017 03:41 AM]
மீள வலியுறுத்தப்படும் கலப்பு நீதிமன்ற விசாரணை
[Sunday, 08/01/2017 03:40 AM]
நல்லாட்சி அரசின் பயணம் சரியான திசையில் செல்கின்றதா?
[Saturday, 07/01/2017 01:46 AM]
சர்வதேச நீதிபதிகளை பரிந்துரைத்த காரணம் இதுதான்!
[Saturday, 07/01/2017 01:44 AM]
சிறிலங்காவுக்கு சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம்?
[Sunday, 01/01/2017 04:48 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 15 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube