முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
போர்க்குற்ற விசாரணைக்கான கதவுகள் திறக்கப்படுமா?
[Sunday, 09/07/2017 07:37 AM]

புதிய இராணுவத் தளபதி, புதிய பாதுகாப்புச் செயலர், புதிய ஜனாதிபதி செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண புதிய ஆளுநர் என ஒரே நாளில் நான்கு முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 4ம் திகதி வழங்கியிருந்தார்.

இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இலங்கை இராணுவத்தின் இரண்டாவது தளபதியாக நியமிக்கப்பட்டதும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த கபில வைத்தியரத்ன பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டதும், பாதுகாப்புக் கட்டமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த நியமனங்களாகப் பார்க்கப்படுகின்றன

இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க முப்பது ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் புலிகளுடன் போரிட்ட அனுபவம் கொண்டவர்.

ஆரம்பத்தில் பொறியியல் படைப்பிரிவில் இணைந்து பின்னர் விசேட படைப்பிரிவுக்கு மாறியவர்.

சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் காலாட்படைப் பிரிவுகளையும் வழிநடத்தியவர். இராணுவத்தின் முக்கிய நிர்வாகப் பணிகளிலும் இருந்தவர்.

அரசியல் பழிவாங்கலினாலும் பாதிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்தவர்.

இவருடன் இராணுவத் தளபதி பதவிக்கு சேவை மூப்பு அடிப்படையில் பிரதானமாகப் போட்டியில் இருந்தவர்களில் ஒருவர் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா. அவருக்கு பௌத்த பிக்குகளின் ஆதரவு இருந்தது.

போட்டியில் இருந்த மற்றொருவர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க. 53வது டிவிஷனின் கட்டளைத் தளபதியாக இருந்தவர் என்று காரணம் கூறப்பட்டு அமெரிக்காவினால் சிறப்பு பயிற்சி கருத்தரங்கு ஒன்றுக்கு வீசா வழங்க மறுக்கப்பட்டவர்.

அவர் போர் முடிந்த பின்னரே 53வது டிவிஷனுக்கு தலைமை தாங்கியிருந்தார் என்பது வேறு விடயம்.

பௌத்த பிக்குகளின் பின்னணியைக் கொண்ட ஒருவரை இராணுவத் தளபதியாக்குவதன் சிக்கலையும் அமெரிக்காவினால் வீசா மறுக்கப்பட்ட ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பதன் சிக்கலையும் ஜனாதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.

இவை லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு இராணுவத் தளபதி பதவி சுலபமாகக் கிட்டுவதற்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்கக் கூடும்.

அதேவேளை புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள கபில வைத்யரத்ன பிஜியில் நீதிபதியாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்.

அத்துடன் முன்னைய யூகொஸ்லாவியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐநாவின் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுநராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்.

போர்க்குற்ற வழக்குகள் விடயத்தில் இவர் அனுபவம் கொண்டவராக விளங்குவது முக்கியமானதொரு விடயம்.

advertisement


இந்த இரண்டு நியமனங்களையும் அரசாங்கம் எவ்வாறு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பது எதிர்பார்ப்புக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தினால் நல்லிணக்கச் செயல்முறைகளில் முழுமையாக ஒத்துழைக்கக் கூடிய ஒருவராக லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இருப்பதும் சிக்கலான விடயங்களில் கூட அவர் பக்குவமாக கருத்துக்களை வெளிப்படுத்தி வந்திருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

தற்போதைய சூழலில் இராணுவத் தளபதி ஒருவர் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றாதவராக அரசாங்கத்தின் செயல்முறைக்கு ஒத்துழைப்பவராக இருப்பதே முக்கியம்.

அந்தவகையில் புதிய இராணுவத் தளபதியின் தெரிவு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக காணப்படுகிறது.

இராணுவத் தளபதியாகப் பதவியேற்றதும் கடந்த 5ம் திகதி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க.

அதில் இராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் குற்றச்சாட்டகளைத் தாம் நிராகரிப்பதாக கூறியிருந்தார்.

இரண்டு தண்டனைச் சட்டங்களுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்தினர் தவறுகளைச் செய்திருக்க வாயப்பில்லை என்றும் ஆனாலும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

போர்க்குற்றங்கள் நடக்கவில்லை என்று நிராகரித்திருந்த லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவே, ஒரு கட்டத்தில் இரண்டு லட்சம் பேரைக் கொண்ட இராணுவத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் தவறிழைக்கலாம் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.

படையினர் மற்றும் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கூறியிருந்தார்.

போர்க்குற்ற விசாரணைக்கான எதிர்கொள்ளத் தயார் என்று கூறக்கூடிய இராணுவத் தளபதியாக அவர் இருக்கிறார். இராணுவம் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. எந்த விசாரணைகளும் அது தொடர்பாக நடத்த வேண்டியதில்லை. என்ற அழுங்குப் பிடியில் இருக்காமல் குற்றங்கள் நடக்கவில்லை.

ஆனாலும் குற்றச்சாட்டுகள் இருப்பதால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்று கூறுகின்ற ஒரு இராணுவத் தளபதி வாய்த்திருப்பது அரசாங்கத்துக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விடயம்.

ஏனென்றால் போர்க்குற்றங்கள் சார்ந்த விசாரணை ஒன்று நடத்தப்படுமா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் ஜெனிவாவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய பொறுப்புக்கூறல் தொடர்பான கடப்பாடுகளை அரசாங்கம் நிறைவேற்றியாக வேண்டும். அதில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையே முக்கியமானது.

இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடிய அதற்கு முரணான நிலைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய ஒரு இராணுவத் தலைமை பதவியில் இருப்பது அரசாங்கத்துக்கு ஆபத்தானது.

குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது இராணுவத் தலைமை தம்முடன் முரண்படுமொ என்ற அச்சம் எந்த அரசாங்கத்துக்கும் இருக்கவே செய்யும்.

ஆனால் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அத்தகையதொரு அச்சத்தை அரசாங்கத்துக்கு கொடுக்கக் கூடியவர் அல்ல என்பதை தனது முதல் செய்தியாளர் சந்திப்பிலேயே உறுதிப்படுத்தியிருக்கிறார்.

போர்க்குற்றங்களை அவர் நிராகரித்திருந்தாலும் விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுத்து உண்மையை அறிந்து கொள்வதற்கு அவர் தயாராக இருப்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சாதகமான விடயம்.

அவர் மாத்திரமன்றி பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்ட்டிருக்கின்ற கபில வைத்தியரத்ன தற்போது அதிகம் பேசப்படுகின்ற இரண்டு விடயங்களுடன் தொடர்புடையவர்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்து வந்தாலும் கபில வைத்யரத்ன அந்த விடயத்தில் ஆழமான அனுபவத்தைக் கொண்டவர்.

பிஜியில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய அவர் தானும் ஒரு வெளிநாட்டில் நீதிபதியாகப் பணியாற்றியவர் என்ற வகையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கும் விடயத்தில் சாதகமான கருத்துக்களைக் கொண்டவராக இருக்கக்கூடும்.

இன்னொன்று முன்னைய யூகோஸ்லாவியாவில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஐநா விசாரணைகளில் வழக்குத் தொடுநராக பணியாற்றியிருக்கிறார். இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான சட்ட அறிவைக் கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டிய நிலையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிக்கு போர்க்குற்ற வழக்கு விவகாரங்களில் அனுபவம் கொண்ட ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை சாதகமான விடயம் தான்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஒரு சாதகமான சூழலை உருவாக்கும் நோக்குடன் அரசாங்கம் இந்த நியமனங்களை வழங்கியதா என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு முன்பிருந்த சூழல்களை விடவும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்கு உகந்ததான ஒரு புறச்சூழல் தற்போது உருவாகியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடக்குமா இல்லையா நியாயமாக நடக்குமா? இல்லையா என்பதெல்லாம் இன்னொரு விவாதத்துக்குிரிய விடயங்கள்

ஆனால் போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்குச் சாதகமான அடிப்படைப் புறச்சூழல் ஒன்று முதலில் அவசியம்.

இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலர் நியமனங்கள் அத்தகையதொரு புறச்சூழலை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

ஆனாலும் இந்தப் புறச்சூழலை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமா இல்லையா என்பதே முக்கியமான கேள்வி.

இந்த விடயத்தில் அரசாங்கம் எடுக்கப் போகும் முடிவு நிச்சயமாக இரண்டு ஆண்டு காலஅவகாசத்துக்குப் பின்னர் ஜெனிவாவில் நடக்கவுள்ள கூட்டத்தில் நிச்சயம் கனதியான தாக்கத்தை செலுத்தக் கூடியதாக இருக்கக் கூடும்

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சிறிலங்காவில் இராணுவ மறுசீரமைப்பு சாத்தியமா?
[Thursday, 21/12/2017 07:23 AM]
சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா
[Sunday, 10/12/2017 12:40 AM]
பிரபாகரன்: ஆட்டிப் படைக்கும் ஆளுமை
[Sunday, 26/11/2017 08:08 AM]
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மீதான தாக்குதல்
[Monday, 13/11/2017 06:14 AM]
எப்படித் தலைமை தாங்க வேண்டும் என்று தலைவர்களுக்கு புத்தர் போதிக்கவில்லை
[Thursday, 09/11/2017 07:06 AM]
நாடாளுமன்ற சமநிலையை மாற்றியமைக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?
[Tuesday, 07/11/2017 06:52 AM]
தேர்தல் அறிவிப்பு: புதிய அரசியலமைப்பு விவாதத்தை விழுங்கிவிட்டது!
[Sunday, 05/11/2017 03:25 AM]
கிராமங்களில் வறுமையை வளர்த்த சிங்கள பௌத்த மேலாதிக்கம்
[Friday, 03/11/2017 05:42 AM]
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலியை வெளிப்படுத்தி நிற்கும் ஒரு மரணம்
[Friday, 27/10/2017 05:46 AM]
சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா
[Monday, 16/10/2017 07:04 AM]
அமெரிக்கா பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்!
[Sunday, 03/09/2017 01:32 AM]
சீனாவின் கடன்பொறி – சிறிலங்கா முன் உள்ள சமநிலை சவால்
[Monday, 21/08/2017 12:45 AM]
சீனாவிடம் அம்பாந்தோட்டை – இந்தியா கவலைப்படுவது ஏன்?
[Friday, 04/08/2017 07:07 AM]
மலபார் கூட்டுப் பயிற்சி – யாரைக் குறிவைக்கிறது?
[Wednesday, 02/08/2017 07:19 AM]
சிறிலங்கா அரசுக்கு கடுப்பை ஏற்படுத்திய ஐ.நா சிறப்பு நிபுணரின் பூர்வாங்க அறிக்கை
[Monday, 24/07/2017 07:06 AM]
வரலாற்றுப் பழி சுமக்குமா கூட்டமைப்பு?
[Monday, 17/07/2017 04:12 AM]
காணாமல் போன பிரிகேடியர்! இரகசியங்கள் கசியுமா?
[Sunday, 16/07/2017 03:49 AM]
மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் மறைமுக சதி!
[Friday, 07/07/2017 05:23 AM]
தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி!
[Friday, 07/07/2017 05:22 AM]
தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்
[Sunday, 25/06/2017 04:38 AM]
வடமாகாண சபைக்கு ஓர் திறந்த மடல்! ச.வி.கிருபாகரன்
[Tuesday, 20/06/2017 01:54 PM]
விக்னேஸ்வரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்
[Monday, 19/06/2017 07:00 AM]
ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி? அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? – நிலாந்தன்
[Sunday, 18/06/2017 07:51 PM]
வடமாகாண சபையின் எதிர்காலம்?
[Sunday, 18/06/2017 06:34 AM]
சிறிலங்காவினால் புறக்கணிக்கப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள்
[Wednesday, 14/06/2017 07:35 AM]
போர் முடிந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரும் சிறிலங்கா திரும்புவதற்குத் தடுமாறும் அகதிகள்
[Sunday, 11/06/2017 06:27 AM]
சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர்
[Thursday, 08/06/2017 05:09 PM]
வடக்கு, கிழக்கில் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிவில் சமூகம்
[Monday, 05/06/2017 01:39 AM]
ஹெய்டியில் சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – பகுதி -2
[Monday, 05/06/2017 01:34 AM]
சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – அனைத்துலக ஊடகம்
[Saturday, 03/06/2017 07:43 AM]
சிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்
[Monday, 29/05/2017 10:41 PM]
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2
[Sunday, 28/05/2017 01:35 AM]
போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்
[Friday, 26/05/2017 10:26 PM]
தெற்கு, மத்திய ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கான கதவுகளை திறந்து விடும் அமெரிக்கா
[Tuesday, 16/05/2017 05:40 AM]
காலை வாரும் ஐநா தீர்மான வரைவு!
[Sunday, 19/03/2017 04:39 AM]
சிறிலங்காவில் இனப்பிளவைத் தூண்டும் மொழி ரீதியான அவமதிப்புகள்
[Tuesday, 07/03/2017 07:20 AM]
சொந்த நிலத்துக்காகப் போராடும் தமிழ் மக்கள்
[Friday, 03/03/2017 05:43 AM]
ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்
[Monday, 27/02/2017 07:12 AM]
சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் வெற்றிக்கு பணப்பை மட்டும் போதுமா?
[Friday, 24/02/2017 05:11 AM]
காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம்
[Tuesday, 21/02/2017 06:48 AM]
இந்திய – சிறிலங்கா உடன்பாடு : சிஐஏ அறிக்கையை நிராகரிக்கும் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வாளர்
[Monday, 20/02/2017 06:12 AM]
புலிகள் சுமந்திரனைக் கொல்ல திட்டமா? இந்திய இலங்கை அரசுகளின் நாடக மேடை ஆரம்பம்
[Monday, 30/01/2017 11:25 PM]
வாய்ப்பைத் தவறவிடப் போகிறார்களா சிங்களத் தலைவர்கள்?
[Thursday, 12/01/2017 06:59 AM]
பௌத்த மதவெறியினால் மியான்மாருக்குள் ஊடுருவும் ஐ.எஸ் தீவிரவாதம்
[Monday, 09/01/2017 06:48 AM]
தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைக்கக்கூடாது!
[Sunday, 08/01/2017 06:07 AM]
ஆட்சிக்கும் பிரதமருக்கும் அடித்துள்ள அபாய மணி..! - மோசமான விளைவுகளை சந்திக்குமா இலங்கை??
[Sunday, 08/01/2017 03:41 AM]
மீள வலியுறுத்தப்படும் கலப்பு நீதிமன்ற விசாரணை
[Sunday, 08/01/2017 03:40 AM]
நல்லாட்சி அரசின் பயணம் சரியான திசையில் செல்கின்றதா?
[Saturday, 07/01/2017 01:46 AM]
சர்வதேச நீதிபதிகளை பரிந்துரைத்த காரணம் இதுதான்!
[Saturday, 07/01/2017 01:44 AM]
சிறிலங்காவுக்கு சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம்?
[Sunday, 01/01/2017 04:48 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 15 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube