முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
புலிகள் அமைப்பு பிளவடைந்ததாலேயே தோற்றது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதே நிலையா?
[Sunday, 18/06/2017 11:54 AM]

விடுதலைப்புலிகள் அமைப்பு கூட பிளவடைந்த நிலையிலேயே தோல்வி நிலைக்கு சென்றது. அந்த வகையிலேயே கட்சிகளை உடைத்து சுயலாப அரசியல் செய்யும் வகையில் சில சக்திகள் செயற்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகள் ஒன்றிணைந்த தமிழ் மக்களின் பொது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என ஏகமனதாக செயற்பட்டது.

வடமாகாண சபையை பொறுத்தமட்டில் சீ.வி.விக்னேஸ்வரன் பழுத்த புத்திஜீவி என்ற அடிப்படையில் அமைச்சர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வழிகாட்டியாக நடத்திச் செல்லக்கூடிய தலைமைப்பீடத்திலுள்ள முதலமைச்சராக காணப்படுகின்றார்.

அவர் மீது எங்களுக்கு கடந்த காலத்தில் பாரிய நம்பிக்கை இருந்தது. நான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

தலைமைப் பீடத்திலிருக்கின்ற சீ.வி.விக்னேஸ்வரன் தவறுகள் விடுகின்ற போது கண்காணித்து கட்டுப்படுத்தி அதை முளையில் கிள்ளியெறிந்து கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பாகும். ஏனென்றால் அவர் ஒரு புத்திஜீவி என்ற அடிப்படையில் அவ்வாறான பார்வை எங்களுக்கு இருக்கின்றது.

நான்கு அமைச்சர்கள் மீதம் விசாரணைகள் நடத்தப்பட்டு இருவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு அவர்கள் தங்களுடைய பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஏனைய இருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்படும் முன்பே அவர்கள் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் வட மாகாணசபையில் இதன் காரணமாக ஒரு சலசலப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இதனால் அவர்கள் தன்னிச்சையாக செயற்பட்டு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றார்கள்.

இந்த தீர்மானம் சரியா பிழையா என்பதை விட இது தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்க் கட்சிகள் மத்தியில் உள்ள ஒற்றுமையை கூட்டுறவை பலவீனப்படுத்திவிடும் என்ற போக்கு எங்கள் பார்வையில் தெரிகின்றது.

இப்பிரச்சினையை சமரசம் செய்ய வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் சித்தார்த்தன் போன்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனெனில் தமிழர்களின் பலமாக காணப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடக்கூடாது.

ஊழல்மோசடிக் குற்றச்சாட்டுக்கள் யார் செய்தாலும் சரியான முறையில் அது நிரூபணமாக்கப்பட்டால் தார்மீகரீதியாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது.

ஆனால் விசாரணைகள் நடுநிலையான முறையில் பக்கச்சார்பின்றி நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட வேண்டும். விசாரணையின் பின்னர் விசாரணைக்குழுவின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்துக்கள் அங்கு பரிமாறப்படுகின்ற நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது.


எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு வழிநடத்துகின்ற கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்தப் பிரச்சனையானது சமரசமான முறையில் தீர்க்கப்பட வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் அதில் ஈடுபட்டவர்கள் தார்மீகமாக விலகிச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கின்றது.

இந்த விசாரணையானது பக்கச்சார்பில்லாத நடுநிலையான விசாரணையாக இருக்கும் பட்சத்தில் அந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதில் தாமதங்கள் இருக்கக்கூடாது.

நான்கு அமைச்சர்களையும் வழிநடத்திச் செல்கின்றவர் என்ற வகையில் விக்னேஸ்வரனிற்கும் சில தார்மீக பொறுப்புகள் இருக்கின்றன. ஒரு அமைச்சர் மீது சிலசில குற்றச்சாட்டுக்கள் வருகின்றபோது அவர் சிறு கருத்துப்பரிமாறல்களுடன் முளையிலேயே அகற்றியிருக்கலாம்.

ஒட்டுமெத்தமாக நால்வரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகின்ற நிலை வரும் பட்சத்தில் மேற்பார்வையில் குறைபாடுகள் இருக்கின்றதோ அல்லது கட்டுப்படுத்துவதற்கு தாமதித்திருக்கின்றோமே போன்ற கேள்விகளை அவரிடமும் கேட்கக்கூடிய நிலைமை மக்களுக்கு இருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையே முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவரும் நிலையை உருவாக்கியிருக்கின்றது.

நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்று கொண்டுவரப்படும் போது ஜனநாயக நடைமுறையொன்று இருக்கின்றது. அந்த மாகாணசபையில் இருக்கின்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் அதை நிராகரித்தால் தொடர்ந்தும் அவர் முதலமைச்சராக பதவி வகிக்கும் தகுதி அவருக்கு இருக்கும்.

மக்களின் அபிப்பிராயமும் மாகாணசபை உறுப்பினர்களின் அபிப்பிராயமும் ஒருமித்த நிலையிலிருந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வடமாகாணசபையில் விவாதித்து நிறைவேற்றப்பட வேண்டும் என்று இருந்தாலும்கூட அந்த முதலமைச்சர் மீது மாகாணசபை உறுப்பினர்கள் பலர் பெரும்பான்மை நம்பிக்கையை காட்டுகின்ற பட்சத்தில் அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துவிடும்.

எவ்வாறாயினும் நடைமுறைச் சத்தியமான அணுகுமுறைகளுக்கு அமைய இந்த விடயத்தில் சமரசத் தீர்வு காண்பதா அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதித்து முடிவெடுப்பதா என்பது வடபுலத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சார்ந்த விடயமாகவும் மக்கள் சார்ந்த விடயமாகவும் இருக்கின்றது.

மக்களின் நாடித்துடிப்பு எப்படி இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்படவேண்டிய தேவை வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு இருக்கின்றது.

கட்சிக்குள் முரண்பாட்டை உருவாக்கி உடைத்து விடக்கூடிய போக்கில் சில கட்சிகள் காரசாரமான அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த அறிக்கைகள் சமரசத் தீர்வுக்கு தடையாக இருக்கின்றது. வடமாகாண மக்கள் மத்தியில் நன்கு சிந்திக்கக்கூடிய புத்திஜீவிகள் காணப்படுகின்றார்கள்.

அவர்கள் அரசியலில் ஈடுபடுகின்ற பிரதிநிதிகளுக்கும் ஆலோசனைகள் கூறக்கூடிய முதிர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே புத்திஜீவிகளுடன் இதுபற்றி கலந்துரையாடி தமிழர்களின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய விதத்தில் தீர்வை தீர்க்கமாகவும் நியாயமாகவும் காணவேண்டிய தேவை இருக்கின்றது.

எங்காவது சிறுபிளவு சிறு வெடிப்பு ஏற்படுமாகவிருந்தால் அந்த வெடிப்பில் ஆப்பினை வைத்து பிளந்துவிடும் போக்கு காணப்படுகின்றது.

ஒவ்வொரு கட்சி தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய விடயமென்னவென்றால் எப்போது எல்லாம் நாங்கள் பிளவடைந்தோமோ, பிரிவினைக்குள்ளாக்கப்பட்டமோ, ஒற்றுமையிழந்தோமோ அப்போது எல்லாம் நாங்கள் தோல்வியினைக் கண்டுள்ளோம்.

advertisement


எப்போது எல்லாம் நாங்கள் ஒன்றுபட்டோமோ அப்போது எல்லாம் நாங்கள் வெற்றியைக்கண்டுள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதை தொடர்ந்து 15 ஆசனங்களை கைப்பற்றினோம், 22 ஆசனங்களை கைப்பற்றினோம் என்றால் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றார்கள்.

எப்போது எல்லாம் பிளவடைந்துள்ளோமோ, அப்போது எல்லாம் நாங்கள் தோல்வியை கண்டுள்ளோம். கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கூட பலமாக இருந்தபோது வெற்றிமேல் வெற்றிபெற்று சர்வதேசத்தில் பேசப்பட்ட விடுதலை அமைப்பாக காணப்பட்டது. அது பிளவடைந்த நிலையிலேயே தோல்வி நிலைக்கு சென்றது.

கடந்த கால நிலைமையினை கவனத்தில் கொள்ளும்போது கட்சிகளை உடைத்து சுயலாப அரசியல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படும் சில சக்திகள் காணப்படுகின்றது.

அவ்வாறானவர்கள் பொங்கி எழுந்து உணர்ச்சிபூர்வமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் அடுத்த கட்ட அரசியலுக்கு ஒரு பலத்தினை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கின்றனர்.

மீண்டும் மீண்டும் மக்களிடம் சென்று பலப்பரீட்சை நடாத்தவேண்டிய அவசியம் இல்லை. மக்கள் பல தடவைகள் தங்களது நிலைப்பாட்டினை நிரூபித்துள்ளனர்.

இந்த நிலையில் கட்சியை உடைத்தி சுயநல அரசியல் செய்ய வேண்டும் என்று யாராவது நினைக்காமால் நிதானமாக அளந்து கருத்துகளை பரிமாறவேண்டிய நிலையில் உள்ளோம் என தெரிவித்தார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இராணுவத்தின் காட்சிக்காக இந்திய இராணுவத்தின் ஆயுதங்கள்
[Monday, 16/10/2017 07:08 AM]
சலப்பையாற்றில் 650 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்
[Monday, 16/10/2017 07:04 AM]
பாதுகாப்புக்கு அதிக நிதி - கூட்டமைப்பு அதிருப்தி!
[Wednesday, 11/10/2017 07:32 AM]
நாமல் உள்ளிட்ட 3 எம்.பிக்கள் கைது - 16 ம் திகதி வரை விளக்கமறியல்
[Wednesday, 11/10/2017 07:31 AM]
வடக்கில் வெள்ளியன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு
[Wednesday, 11/10/2017 07:29 AM]
இன்று முதல் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அரசியல் கைதிகள் எச்சரிக்கை
[Sunday, 08/10/2017 03:36 AM]
தமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்...
[Saturday, 07/10/2017 07:03 AM]
திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் அபிவிருத்தி குறித்து இந்தியா- சிறிலங்கா பேச்சு
[Saturday, 07/10/2017 06:18 AM]
ஒன்றுபட்ட சிறிலங்காவின் இறைமையின் பக்கமே இந்தியா நிற்கும் – சுமித்ரா மகாஜன்
[Saturday, 07/10/2017 06:17 AM]
வடக்கில் பொருளாதார தன்னிறைவை ஏற்படுத்த திட்டம்!
[Saturday, 07/10/2017 06:13 AM]
விக்னேஸ்வரன் சத்தம் போடுவதால் இராணுவத்தை அகற்ற முடியாது! - ருவான் விஜேவர்த்தன
[Thursday, 05/10/2017 07:13 AM]
அதிகாரங்களைப் பகிரும், நாட்டைக் கூறுபோடாத அரசியலமைப்பு அவசியம்! - மல்வத்தை மகாநாயக்கர்
[Thursday, 05/10/2017 07:12 AM]
மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்க ஐவர் குழு அறிவிப்பு – இருவர் தமிழர்கள்
[Thursday, 05/10/2017 07:05 AM]
எரிபொருள் சந்தையைக் கைப்பற்ற சீன நிறுவனங்கள் திட்டம் – அரசாங்கம் நிராகரிப்பு
[Thursday, 05/10/2017 07:01 AM]
மகாசங்கங்களின் ஆலோசனைப்படியே ஆட்சி நடத்த வேண்டும் – அமரபுர மகாநாயக்கர்
[Thursday, 28/09/2017 07:32 AM]
சுவிஸ் குமாரை தப்பிக்க வைக்க முயன்றார் அமைச்சர் விஜயகலா – நீதிபதி குற்றச்சாட்டு
[Wednesday, 27/09/2017 05:31 AM]
புலிகளின் குரலாக இருக்கிறார் விக்கி! - யாழ்ப்பாணத்தில் குற்றம்சாட்டிய எஸ்.பி.
[Tuesday, 26/09/2017 07:00 AM]
நியூயோர்க்கில் எதிர்பார்த்த முக்கிய சந்திப்புகள் கைகூடாமல் நாடு திரும்பினார் சிறிலங்கா அதிபர்
[Tuesday, 26/09/2017 06:35 AM]
தியாகதீபம் திலீபனுக்கு நல்லூரில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அஞ்சலி
[Tuesday, 26/09/2017 06:33 AM]
போர் முடிந்தாலும் படைகளை பலப்படுத்துவோம்! - ருவான் விஜேவர்த்தன
[Thursday, 21/09/2017 07:38 AM]
மார்ச்சுக்குள் உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்கள் – மாறியது ரணிலின் காலக்கெடு
[Thursday, 21/09/2017 07:34 AM]
சிறிலங்காவில் நிலையான அமைதிக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – ஐ.நா தூதுவர்
[Thursday, 21/09/2017 07:33 AM]
நாடாளுமன்றம் கெட்டவர்களின் கூடாரம் என்கிறார் அஸ்கிரிய பீடாதிபதி!
[Saturday, 16/09/2017 07:49 AM]
150 இலங்கையர்களை தேடப்படுவோர் பட்டியலில் இருந்து இன்டர்போல் நீக்கியது ஏன்?
[Saturday, 16/09/2017 07:49 AM]
ஒரே நாளில் 1.5 மில்லியன் ரூபா – லலித்தை மீட்க பிக்குகள் வீதி வீதியாக நிதி சேகரிப்பு
[Saturday, 16/09/2017 07:42 AM]
தியாகி திலீபனின் நினைவு நாள் நல்லூரில் எழுச்சியுடன் ஆரம்பம்!
[Saturday, 16/09/2017 07:39 AM]
அடுத்தமாதம் வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்
[Wednesday, 13/09/2017 07:43 AM]
இறுதிப்போரில் பங்கேற்ற 18 இராணுவ அதிகாரிகள் ஐரோப்பாக்குச் செல்லத் தடை!
[Wednesday, 13/09/2017 07:41 AM]
வடக்கு தொடர்பாக தெற்கு மக்களிடம் தவறான எண்ணம்! - முதலமைச்சர் விக்னேஸ்வரன்
[Sunday, 10/09/2017 05:25 AM]
இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடாது – இந்தியாவுக்கு நிபந்தனை
[Sunday, 10/09/2017 05:21 AM]
சிறிலங்காவுடன் உறவுகளை பலப்படுத்த இந்தியப் பிரதமர் விருப்பம் – மாரப்பனவிடம் எடுத்துரைப்பு
[Sunday, 10/09/2017 05:19 AM]
மஹிந்தவைக் கூண்டில் ஏற்ற முடியாது! - மைத்திரி நினைத்தால் மட்டுமே சாத்தியம்
[Saturday, 09/09/2017 04:54 AM]
மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கிறார் சம்பந்தன்!
[Saturday, 09/09/2017 04:53 AM]
சுஸ்மாவை சந்தித்தார் திலக் மாரப்பன
[Saturday, 09/09/2017 04:46 AM]
லலித் வீரதுங்க அப்பாவி, எந்த தவறையும் செய்யவில்லை- என்கிறார் மகிந்த
[Saturday, 09/09/2017 04:43 AM]
இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி முறை­யி­லான அதி­கா­ரப் பகிர்வு! - இடைக்கால அறிக்கையில் கூட்டமைப்பின் யோசனை
[Friday, 08/09/2017 04:13 PM]
பொறுப்புக் கூற இலங்கை அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்த வேண்டும்! - லண்டன் கருத்தரங்கில் வலியுறுத்தல்
[Friday, 08/09/2017 04:09 PM]
உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நிறைவேறியது – இறுதி வாக்கெடுப்பில் நழுவியது கூட்டமைப்பு
[Friday, 08/09/2017 04:07 PM]
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பதிலளித்தேயாக வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம்
[Friday, 08/09/2017 04:04 PM]
சிறிலங்கா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – அமெரிக்கா
[Friday, 08/09/2017 04:02 PM]
கூட்டமைப்பு சமர்ப்பித்த யோசனை என்னவென்று தெரியாது! - சித்தார்த்தன்
[Thursday, 07/09/2017 07:35 AM]
ரவிராஜ் கொலை வழக்கு - விடுவிக்கப்பட்ட கடற்படை அதிகாரிக்கு பிடியாணை!
[Thursday, 07/09/2017 07:34 AM]
மகிந்தவின் ‘மூவரணி’யில் ஒருவரான லலித் வீரதுங்கவுக்கு 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை
[Thursday, 07/09/2017 05:04 AM]
20 ஆவது திருத்தச் சட்டவரைவை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு
[Thursday, 07/09/2017 05:04 AM]
அஞ்ச வேண்டாம், நான் இருக்கிறேன்! - ஜயசூரியவுக்கு ஆறுதல் கூறும் கோத்தா
[Wednesday, 06/09/2017 03:54 PM]
20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள்
[Wednesday, 06/09/2017 03:51 PM]
யாழ்.கோட்டையில் மீண்டும் இராணுவத்தை குடியமர்த்த ஆளுனர் முயற்சி!
[Wednesday, 06/09/2017 03:48 PM]
ஜெனரல் ஜகத் ஜயசூரியவை, இன்டர்போல் ஊடாக கைது செய்ய நடவடிக்கை?
[Monday, 04/09/2017 07:09 AM]
போர் நடவடிக்கைகளில் இருந்து என்னை ஒதுக்கி வைத்திருந்தார் பொன்சேகா! -ஜெனரல் ஜெகத் ஜயசூரிய.
[Sunday, 03/09/2017 12:53 AM]
பொன்சேகாவின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்! - கூட்டமைப்பு
[Sunday, 03/09/2017 12:45 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 125 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube