மம்முட்டி, அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் வந்தே மாதரம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகிறது. ‘கோலங்கள்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘மறுமலர்ச்சி’ உள்பட பல படங்களை தயாரித்த ஹென்றி இப்படத்தை தயாரித்திருக்கிறார். அரவிந்த் இயக்கியுள்ளார். தமிழ், மலையாளம் இரு மொழிகளில் தயாராகியுள்ளது வந்தே மாதரம். தமிழில் இப்படத்துக்கு முதலில் அறுவடை என்று பெயர் வைத்திருந்தனர். மலையாளத்தில் வந்தே மாதரம் என்பதால் பின்னர் தமிழிலும் வந்தே மாதரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சினையை கருவாக கொண்ட இந்த படத்தில், மம்முட்டி மத்திய புலனாய்வு துறை அதிகாரியாகவும், அர்ஜுன் ‘ஸ்பெஷல் பிராஞ்ச்’ போலீஸ் சூப்பிரண்டாகவும் நடித்துள்ளனர். மம்முட்டியின் மனைவியாக ‘பைலட்’ வேடத்தில் சினேகா நடித்து இருக்கிறார். அர்ஜுனுக்கு ஜோடி இல்லை. இந்த படத்துக்காக தேசப்பற்றை வலியுறுத்தி கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.
Categories: